கனவு காணுங்கள்
கனவு நன்றே காணுங்கள்
குழந்தைகளே தூங்குங்கள்.
புது உலகைப் படைத்திட
புதுக் கனவு காணுங்கள்
ஏழ்மை யில்லா உலகினை
ஏற்றக் கனவு காணுங்கள்.
பாழ்மை யில்லா படைப்புகளை
படைக்க் கனவு காணுங்கள்.
செயற்கை யில்லா வேளாண்மை
செய்யக் கனவு காணுங்கள்.
தரிசு இல்லா பூமியாக
தழைக்கக் கனவு காணுங்கள்
அறியாமை நீங்கி உலகு
அமையக் கனவு காணுங்கள்.
பகையறியா ஞாலமாக
பசுமைக் கனவு காணுங்கள்.
சுயநலம் இல்லாச் சுற்றம்
சூழக் கனவு காணுங்கள.
பயம் மறந்த விடியலை
பாரக்கக் கனவ்வு காணுங்கள்.
நதிகளெலாம் கைகோர்க்கும்
நாளைக் கனவு காணுங்கள்.
அதிகாரஞ் செயலாக்கும்
அரசைக் கனவு காணுங்கள்.
ஊழல் செத்த நிர்வாகம்
உதிக்கக் கனவு காணுங்கள்.
ஊழியரும் மக்கள் நிலை
உணரக் கனவு காணுங்கள்.
வேலை தேடும் அவலநிலை
விலகக்க் கனவு காணுங்கள்.
உழைக்காத வெட்டிக் கூட்டம்
உழைக்கக் கனவுகாணுங்கள்.
சலுகை விரும்பா சமுதாயம்
சமையக் கனவு காணுங்கள்.
ஓட்டுக்கான இலவசங்கள்
ஒழியக் கனவு காணுங்கள்.
பிச்சை இல்லாப் பேறுலகு
பிறக்கக்னவு காணுங்கள்.
நடைபாதைக் குடும்பம் இல்லா
நாடைக் கனவு காணுங்கள்.
எல்லாரும் எல்லாம் பெற்ற
இயல்பைக் கனவு காணுங்கள்.
திருடரில்லா தீர்வுநிலை
தேரக் கனவு காணுங்கள்.
சாதி மத பேதஞ் சாகும்
சமயம் கனவு காணுங்கள்.
நீதிகூறுஞ் செய்திகளே
நிலவக் கனவு காணுங்கள்.
பாலினக் கொடுமை செய்யா
பாரைக் கனவு காணுங்கள்,
உயிர பறிக்கும் பாவமில்லா
உலகைக் கனவு காணுங்கள்.
காந்தி காமராசர் களை
கனவிலா வது காணுங்கள்.
குழந்தைகளேதூங்குங்கள்
கூவும் வேளை விழியுங்கள்.
கொ.பெ.பி.அயயா
No comments:
Post a Comment