உழுதவன் பாடு.
உழுதவனை நினைக்கிறேன்.
தொழுதவனை வியக்கிறேன்.
பொழுதவன் பட்ட பாடு
விழுதவன் விட்ட நாடு.
ஒருவர் ஊருக்கு முதலாளி--அந்த
ஒருவர் வாழவே தொழிலாளி.
உழைப்பைச் சுரணடிய பெரிச்சாளி--அது
ஒழிநததால் உயர்ந்தான் பாட்டாளி.
நாளும் உழைப்பான் உழைப்பாளி-வெறும்
நாழித் தானியக் கூலிக்கு.
காரி உமிழ்வான் முதலாளி---வெந்த
காய்ப்பு இல்லாக் கைகளில்.
கோவணம் உழவன் சீருடை-ஓலைக்
குடிசை அவனது சுகவாசம்.
வெயிலும் காற்றும் உறவாகும்--ஒழுகும்.
வேர்வைக் குளியல் அடையாளம்.
சோற்றுக்கு அழுவான் பிள்ளை-துணி
மாற்றுக்கு ஒளிவாள் மனைவி
அழுகை யதுவே மொழியாச்சு---அன்று
உழுதவன் பாடே இதுவாச்சு.
உழப்பை உறிஞ்சி உண்டோனோ---இன்று
பிழைப்பைத் தேடி ஓடுகிறான்.
காலச் சக்கரம் உருண்டது---பழமை
காடசியும் மாறிப் புரண்டது.
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment